மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படம், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின், இரண்டு படங்களிலிருந்து சில காலம் ஓய்வெடுத்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏ ஆன பின்பும் முழுமையாகத் தனது சேப்பாக்கம் தொகுதியிலேயே பணிபுரிந்து வந்தார். அதனால் எப்போது படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இதன் படப்பிடிப்பு திருப்போரூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.