உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சுகுணாபுரம்,கோவைபுதூர் ஆகிய பகுதிகளில் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக கோவை மாநாகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது, புதிய உறுப்பினர் சேர்க்கை, மற்றும் பல்வேறு இடங்களில் ரசிகர் மன்றத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை 92 வது வார்டு சுகுணாபுரம் பகுதியில் நற்பணி மன்றத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் கோவை மாவட்ட தலைவர் இருகூர் உதய பூபதி, மாநகர தலைவர் டேவிட் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதே போல கோவைபுதூர் 90 வது வார்டு பகுதியில் மாற்றுத்திறனாளிக்கு வீல் சேர் வழங்கப்பட்டது.