நடைப்பயிற்சி கர்ப்ப கால சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

டாக்டர் ஷங்கர் தண்டபாணி, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை

சர்க்கரை நோய் இந்தியர்கள் பலரை பாதிக்கும் நோய்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம் மோசமான உணவுப் பழக்கம் என இதற்கு பல காரணங்கள் உண்டு. இதையெல்லாம் தாண்டி, பெண்களை முக்கியமான கர்ப்ப காலத்தில் தாக்கும் சர்க்கரை நோய் குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்று கே.எம்.சி.ஹெச் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷங்கர் தண்டபாணி அறிவுறுத்துகிறார்.

சர்க்கரை நோயை, டைப் 1, டைப் 2 என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் டைப் 1 என்பது, சிறு வயதிலேயே மரபணுக்கள் மூலம் வரும் பரம்பரை நோய். இது உடலில் இன்சுலின் உற்பத்தியின்மையால் ஏற்படக்கூடியது. டைப் 2 வகை சர்க்கரை நோய் நடுவயதில் பல்வேறு காரணங்களால் வருவது. இந்த பிரச்சனை உள்ளவர்களின் உடலில் இன்சுலின் உற்பத்தியாகும். ஆனால், உடலில் உள்ள செல்கள் அதைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

இந்த இரண்டு வகைகளிலும் இல்லாத மூன்றாவது வகை பிரச்சனை, கர்ப்ப கால சர்க்கரை நோய். ஏற்கனவே சர்க்கரை நோய் இல்லாத பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (நிமீstணீtவீஷீஸீணீறீ ஞிவீணீதீமீtமீs) ஏற்படலாம்.

கர்ப்ப கால சர்க்கரை நோய் என்றால் என்ன?

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் அதிகமாக சுரக்கும் புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், ஹியூமன் பிளேசென்டால் லாக்டோஜென் போன்ற ஹார்மோன்கள் அனைத்தும் இயல்பாகவே இன்சுலினுக்கு எதிராக செயல்படும் இயல்பு கொண்டவை. இதனால் கர்ப்பிணிகளுக்கு இன்சுலின் செயல்பாடு குறைந்து, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதை சரி செய்வதற்காக அவர்களின் உடலில் இன்சுலினும் அதிகமாக சுரக்கும். இது ரத்த சர்க்கரையை சரியான அளவுக்குக் கொண்டு வந்துவிடும்.

இது கர்ப்பிணிகள் எல்லோருக்கும் இயல்பாக நிகழ்கிறது.

ஆனால், சிலருக்கு மட்டும் இப்படி இன்சுலின் தேவையான அளவுக்குச் சுரக்காது. இதனால் அவர்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகவே இருக்கும். அப்போது அவர்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வருகிறது.

யாருக்கெல்லாம் வரும்?

குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருப்பது, உடல் பருமன், மிகத் தாமதமாக கர்ப்பம் தரிப்பது, சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை, முதல் பிரசவத்தில் இந்த நோய் ஏற்பட்டது, கடந்த பிரசவத்தில் அதிக எடையுடன் குழந்தை பிறந்தது போன்ற காரணங்களால் இது வரக்கூடும்.

பாதிப்புகள் என்னென்ன?

இதனால் கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர்ப் பாதைத் தொற்று, காளான் தொற்று, பூஞ்சைத் தொற்று போன்றவை ஏற்படலாம். கருச்சிதைவு ஏற்படலாம்.

ரத்த அழுத்தம் அதிகமாகி, ‘முன்பிரசவ வலிப்பு’ (றிக்ஷீமீ-மீநீறீணீனீஜீsவீணீ) ஏற்பட்டு உயிருக்கு பாதிப்புகள் வரலாம். பிரசவத்திற்குப் பின்னர் சர்க்கரை நோய் வரக்கூடும்.

தாயின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதால், வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி அதிகமாகி எடை கூடிவிடும். இதனால், பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படும். மேலும், குழந்தையைச் சுற்றியுள்ள நீரின் அளவு அதிகமாகும். குழந்தையின் உடல் உறுப்புகள் இயல்பாக உருவாவதில் சிக்கல் இருக்கும்.

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்; குழந்தை பிறந்ததும் இறந்துவிடலாம்.

எனவே, கர்ப்ப கால சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.

எப்படிக் கண்டறிவது?

கர்ப்ப காலத்தின்போது 12வது மற்றும் 26வது வாரத்தில் குளுக்கோஸ் டோலரென்ஸ் டெஸ்ட் (நிறீuநீஷீsமீ ஜிஷீறீமீக்ஷீணீஸீநீமீ ஜிமீst) எனும் பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனை செய்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னர் சாப்பிட்டிருக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் ரத்தப் பரிசோதனை செய்யப்படும். பின்னர் குளுக்கோஸ் தண்ணீர் குடித்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு என இரண்டு முறை ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும்.

12வது வாரத்தில் செய்யும் பரிசோதனையில் சர்க்கரை நோய் இல்லை என தெரியவந்தாலும், 26வது வாரத்திலும் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் ஆகும்.

சிகிச்சைகள் என்னென்ன?

மூன்று விதமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில், சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளான கர்ப்பிணிகளின் உணவுமுறை சீராக்கப்படுகிறது. அதாவது, மாவுச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைக் குறைத்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுதானியங்கள் ஆகியவை உணவில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.

காலையும் மாலையும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்யவேண்டும். சரியான உணவும், நல்ல நடைப்பயிற்சியும் சர்க்கரையின் அளவை சீராக்கிவிடும். இவற்றை செய்தும் சர்க்கரை நோய் சரியாகவில்லை என்றால் இன்சுலின் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தபின், டாக்டரின் ஆலோசனைப்படி இன்சுலின் மருந்தை நிறுத்திவிடலாம்.

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்துக்குப் பிறகு இந்த சர்க்கரை நோய் சரியாகிவிடும். சிகிச்சையும் தேவைப்படாது. என்றாலும், சிலருக்கு அடுத்த 5 முதல் 20 ஆண்டுகளுக்குள் டைப் 2 சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. சரியான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மூலம் இதைத் தடுக்க முடியும்.

தடுக்க என்ன வழி?

முப்பது வயதுக்கு மேல் தாய்மை அடைபவர்களையே கர்ப்ப கால சர்க்கரை நோய் பெரும்பாலும் பாதிக்கிறது. மேலும், உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கும், மாதவிடாய்க் கோளாறு உள்ளவர்களுக்கும் கர்ப்ப கால சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது. ரத்த வழி சொந்தங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும், கர்ப்ப கால சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.

எனவே, உடல் எடையை சீராகப் பராமரிக்க வேண்டும். மாதவிடாய்க் கோளாறுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சரிவிகித சத்துகள் உள்ள ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். அதாவது, சாப்பிடும் உணவில் மூன்றில் ஒரு பங்கு காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகள் கட்டாயம் இருக்க வேண்டும். அரிசி, கோதுமை உணவுகளைக் குறைத்து சிறு தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம்.