இரத்தினம் கல்லூரி – யுவா ஆக்ட்டிவ் அட்வகேசி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் யுவா ஆக்ட்டிவ் அட்வகேசி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

கல்பாத்தி அகோரம் திரைப்படத் தயாரிப்பாளார் மகள் கல்பாத்தி ஐஸ்வர்யா அவர்களால் துவங்கி நடத்தப்பட்டு வரும் யுவா ஆக்ட்டிவ் அட்வகேசி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

யுவா ஆக்ட்டிவ் அட்வகேசி மாணவர்களுக்கு பொருளாதாரம், அரசியல், சமுகம் போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக மாணவர்களுக்கு நல்லாட்சி மற்றும் அதன் சிறந்த பங்களிப்பு தொடர்பான குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன்மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஓப்பந்தம் இரத்தினம் கல்விக்குழுமம் செயலளர் மற்றும் கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் மாணிக்கம் மற்றும் இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.