கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு “ஃபோன் டெத்” வர வாய்ப்பு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு “ஃபோன் டெத்” வர வாய்ப்புள்ளது என எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தினேஷ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

எலும்புப் பகுதிக்கு வரும் ரத்த ஓட்டம் குறைந்தால் அல்லது தடைப்பட்டுவிட்டால் அதை Bone Death, எலும்பு அழுகிப்போய்விட்டது என்பார்கள். அதீத ஸ்டீராய்டு மருந்துகள் பயன்பாடு, அதீத மதுப்பழக்கம், ரத்தம் உறைதல் குறைபாடு, ரத்த ஓட்டத்தில் பிரச்னை, அதிக உடல்பருமன் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். பிரச்னை தீவிரமானால் எலும்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்கிறார். மேலும் இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.