பாரதியார் பல்கலை கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

பாரதியார் பல்கலைக்கழக இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் பேரானந்தம் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட மைக்ரோமச்சினிங் தர உயர் – தரமான அதி மெல்லிய சிலிக்கா படலங்களை உருவாக்கும் ஓர் எளிய கரைசல் செயல்முறைக்கு இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிகை செய்தியில்,

சிலிக்கா (சிலிக்கான் டை ஆக்சைடு) மெல்லிய படலங்கள் எளிதில் ஒளி புகும் மற்றும் மின் காப்பு பண்புகள் கொண்டவை. சிலிக்காவின் மெல்லிய படலங்கள் டிரான்சிஸ்டர்கள் மற்றும் தொகுப்புச் சில்லுக்களை உருவாக்குவதிலும், பாதுகாப்பு படலங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகரித்து வரும் எலக்ட்ரானிக் சாதனங்களின் சிறிதாக்கத்திற்க்கான தேவைக்கு அதி மெல்லிய தடிமன் (1 முதல்8 நானோமீட்டர்கள்) கொண்ட உயர்தர சிலிக்கா படலங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய உயர்தர அதி மெல்லிய சிலிக்கா படங்கள். பொதுவாக, உயர் வெப்பநிலை ஆக்சிஜனேற்றம் அதைத் தொடர்ந்து அரித்தல் செயல்முறையில் சிலிக்கான் மேற்பரப்பில் தயாரிக்கப்படுகின்றன.

தற்போதைய கண்டுபிடிப்பானது. குறைந்த ஈரப்பத நிலையில், செயல்படுத்தப்படும் ஒரு எளிய சோல் ஜெல் எனப்படும் கரைசல் செயல்முறை, இந்த செயல்முறையில் 3 முதல் 30 நானோமீட்டர்கள் தடிமன் கொண்ட உயர் தரமான அதி-மெல்லிய சிலிக்காபடலங்களை தயாரிக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு சிலிக்கான் மேற்பரப்பில் மட்டுமல்லாமல், எந்த திடமான மேற்பரப்புகளிலும், சவாலான / சிக்கலான மேற்பரப்புகளிலும் அதி-மெல்லிய சிலிக்கா படலங்களின் படிவுக்கு உதவுகிறது. தற்போதைய கண்டுபிடிப்பு குறைக்கடத்தி மற்றும் பாதுகாப்பு பூச்சுத் தொழில்களில் சிலிக்கா படலங்களின் உற்பத்தி செலவை கணிசமாக குறைக்கும்.