‘பிகில்’ படம் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை

சென்னையை சேர்ந்த 10 வயது சிறுவன், தன்னுடைய மாமாவுடன் இரவில் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுகொண்டிருந்த பின்சீட்டில் அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன் தூக்கக்கலக்கத்தில் சாலையில் தவறி விழுந்துள்ளான். கீழே விழுந்ததில் நெற்றி, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சிறுவனை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நெற்றியில் பலத்த காயம் இருந்ததால் சிறுவனுக்கு தையல் போட மருத்துவர்கள் முடிவு செய்து முதலில் ஊசி போட முயன்றனர். ஆனால் பயத்தில் ஊசி வேண்டாம் என அவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மறுத்துள்ளான். அப்போது அங்கு இரவுப் பணியில் இருந்த தன்னார்வலர் ஜின்னா , “உனக்கு என்ன பிடிக்கும்” என்று கேட்டதற்கு எனக்கு நடிகர் விஜயை ரொம்பப் பிடிக்கும் எனவும் அவருடைய தீவிர ரசிகர் எனவும் சிறுவன் சசிவர்ஷன் கூறியுள்ளான். மேலும் வலியை மறந்து விஜய் குறித்து தொடர்ந்து சிறுவன் அவரிடம் பேசியிருக்கிறான்.

இதனையடுத்து, செல்போனில் வைத்திருந்த நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்திருக்கிறார் ஜின்னா. வலியை மறந்த சிறுவன் மெய் மறந்து பிகில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது ஊசி போட்டு அதன் பின்னர் தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.