9 இயக்குனர்களின் இயக்கத்தில் ‘நவரசா’

நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது.

இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களின் தலைப்பு மற்றும் அதில் யார் யார் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

கிட்டார் கம்பி மேலே நின்று

காதலை மையப்படுத்தி கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த குறும்படத்துக்கு ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

பிராஜக்ட் அக்னி

‘பிராஜக்ட் அக்னி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் ஆச்சரியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

எதிரி

‘கருணை’ மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு ‘எதிரி’ என பெயரிடப்பட்டு உள்ளது. பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

ரெளத்திரம்

கோபத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு ‘ரெளத்திரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி இயக்கியுள்ளார். ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

பீஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பீஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் அமைதியை மையப்படுத்தி உருவாகியுள்ளது. கவுதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் நடித்துள்ளனர்.

சம்மர் ஆப் 92

‘காமெடி’ மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு ‘சம்மர் ஆப் 92’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

துணிந்த பின்

‘தைரியம்’ மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு ‘துணிந்த பின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சர்ஜுன் இயக்கியுள்ளார். அதர்வா, அஞ்சலி, கிஷோர் இதில் நடித்துள்ளனர்.

இன்மை

‘பயம்’ மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு ‘இன்மை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

பாயசம்

‘அருவருப்பு’ மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு ‘பாயசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வஸந்த் சாய் இயக்கியுள்ளார். டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.