கொரோனா தொற்றிலிருந்து சிட்ரஸ் பழங்கள் பாதுகாக்குமா?

கொரோனா பரவும் காலத்திலும், அதற்குப் பின்னரும் நமக்கு தேவையான வைட்டமின் சி-யை பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தினமும் குறைந்தது 100 கிராம் சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது உடலுக்கு நல்லது.

சத்தான உணவுகள், வழக்கமான உடற்பயிற்சி ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்வுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தாலே, தொற்று நோய்கள் நம்மை நெருங்காது என்பது உண்மையே. இதற்கு வைட்டமின் சி சிறந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க வைட்டமின் சி உதவுவதோடு தொற்றுநோய்களுக்கு எதிராக போராடவும் பலமளிக்கிறது. ஆரஞ்சு, அன்னாசிப்பழம், எலுமிச்சை, கிவி, கொய்யா, திராட்சை, நெல்லிக்காய் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது.

சிட்ரஸ் பழங்களை நாம் அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால், வலுவான நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக நமது உடலை பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

கோவிட் -19 வைரஸ் ஒருவரின் உடலில் நுழைந்தால் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதித்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி ஆன்டிபாடிகளின் உருவாக்கத்தைத் தூண்ட உதவுகிறது, எனவே நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

கொரோனா அறிகுறிகள் தோன்றிய நபர்கள் அதிக அளவு சிட்ரஸ் நிறைந்த உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. வைட்டமின் சி யானது நோயாளிகளின் உடல்நிலையை கணிசமாக மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

Source: News 18 Tamilnadu