இரண்டு பாகங்களாக வெளியாகும் துருவ நட்சத்திரம்

விக்ரம் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் துருவ நட்சத்திரம் இரண்டு பாகங்களாக வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில், பார்த்திபன், ரீது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இப்பட பிடிப்பின் வேலைகள் வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2019-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்தபோது அப்போதும்வெளிவரவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் துருவ நட்சத்திரத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து படத்தின் நீளம் நான்கரை மணி நேரமாக இருப்பதால், இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்ற முடிவில் படக்குழுவினர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.