இன்று முதல் “கோலி சோடா 2” (ட்ரைலர்)

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் இன்று (15.02.18) கோலி சோடா 2 படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான “கோலி சோடா” பெரும் வெற்றியடைந்தது. அதன் தொடர்ச்சியாக “கோலி சோடா 2” வினை இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.

‘ஸ்போர்ட்ஸ் மூவியாக’ உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கிஷோர், இயக்குநர் சமுத்திரக்கனி, விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனி மற்றும் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் கௌதம்மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் வெளியாகும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.