கே.பி.ஆர்.கலை கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் சிறப்புக் கருத்தரங்கம்

கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மேலாண்மையியல் துறை சார்பில் செவ்வாய்க்கிழமையன்று (29.6.2021) ஜூம் வழிகாட்டி மூலம் “ஆக்சர்லடோர்ஸ்/இன்குபேஷன் ஆஃபர்சுனடி ஃபார் ஸ்டுடென்ட்ஸ்” (ACCERLATORS/INCUBATION OPPORTUNITIES FOR STUDENTS) என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வின் விருந்தினர் மீரா, ஏவிபி ஃபோர்ஜ், கோவை. இன்குபேஷன் பற்றிய கண்ணோட்டத்தை எடுத்துரைத்தார். தொழில்முனைவு பற்றியும் இன்குபேஷன் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் பற்றியும் எடுத்து உரைத்தார். மேலும், தயாரிப்பு, சந்தை மற்றும் வளர்ச்சி பக்கங்களில் உள்ள ஆபத்து காரணிகளை விளக்கினார். மாணவர்களை புதுமையாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் 70 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.