‘எனது சேலம் எனது பெருமை’ திட்டம்: கலெக்டர் ரோகிணி

சேலம் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மலர்கொடி. இவரால் தவழந்து தான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும். மூன்று சக்கர சைக்கிள் கிடைத்தால் உதவியாக இருக்கும்.

ஆனால், யாரை எப்படி அணுகுவது என்று மலர்கொடிக்கு தெரியவில்லை. அவரின் நிலையை அறிந்த ஒருவர், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணிக்கு வாட்ஸ்-அப்பில் மலர்கொடியின் படத்துடன் தகவல் கொடுக்க, ரோஹிணி உடனே செயல்பட்டு ஒரே நாளில் மலர்கொடிக்கு மூன்று சக்கர சைக்கிள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சேலம் மாவட்டத்தை முன்னேறும் மாவட்டமாக மாற்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவ நினைப்பவர்களுக்கு என நன்கொடை வழங்க “எனது சேலம் எனது பெருமை” என்ற பெயரில் ஒரு வங்கி கணக்கை தொடங்கி உள்ளார்.

அறிவிப்பு வந்தவுடன், நன்கொடைகள் வந்து சேர தொடங்கியுள்ளன. இந்த நன்கொடைகள் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.