இது காதலர்கள் பூட்டு!

பிப்ரவரி 14 என்றாலே “காதலர் தினம்” என்று அனைவரும் அறிந்ததே. ஒருவரை ஒருவர் பல்வேறு வழிகளில் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வர். அதன் ஒரு பகுதியாக, பாரீஸ் நகரில் சினே நதி மீது உள்ள நடை பாலத்தில் உள்ள பக்கவாட்டு குறுக்குக் கம்பங்களில் 2008ம் ஆண்டு முதல் ஒரு நூதன பழக்கம் தொடங்கியது. ஆம், காதலர்கள் ஒரு பூட்டில் தங்களின் பெயரை எழுதி அதனை பாலத்தில் உள்ள குறுக்குக் கம்பத்தில் பூட்டி, சாவியை ஓடும் நதியில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர்.

பூட்டிய பூட்டைப் போல் தங்கள் காதலும் உறுதியாக இருக்க வேண்டும், காதலர்களும் பிரியக் கூடாது என்பதற்காக இதை பின்பற்றி வருகின்றனர். இப்பழக்கம் தற்பொழுது, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.

தினமணி.காம்