இனி நடிக்கும் எண்ணம் இல்லை : கமல்

தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன்

இனி திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற பிப்ரவரி 21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக இராமநாதபுரத்தில் ஆரம்பித்து பின், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், “மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறேன் கரம் கோர்த்திடுங்கள்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பேசவுள்ளதாகவும், கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது   என தெரிவித்திருந்த கமல்ஹாசன், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி.காம்