ஏகம் பவுண்டேஷன் சார்பில் 80 ஆக்சிஜன் சிலிண்டர்கள்

ஏகம் பவுண்டேஷன் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.

தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் பல்ஸ் ஆக்சி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதால் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த சூழலில், ஏகம் பவுண்டேஷன் சார்பில் 80 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 15 ஆயிரம் என்.95 முகக்கவசங்கள், 2 ஆயிரம் பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் மற்றும் 900 பிபிஇ கிட்-கள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராகி வரும் சூழலில், தன்னார்வலர்கள் வழங்கும் உதவிகள் நிச்சயம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.