கொரோனா தொடரும்… அறிவியலும் மருத்துவமும் நம்மை காக்கும்

டாக்டர் வருண் சுந்தரமூர்த்தி, தொற்றுநோய் துறை நிபுணர்,கே.எம்.சி.ஹெச்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து எப்போது நாம் முழுமையாக மீள்வோம் என்பது இதுவரை கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் சில மாதங்கள் அல்லது வருடத்திற்கு இது நீடிக்கும். முக்கியமாக, தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் மிகவும் அவசியம். தடுப்பூசி பற்றிய வதந்திகள், கொரோனாவை விட வேகமாகப் பரவுகின்றன. அறிவியலையும் மருத்துவத்தையும் மட்டுமே இந்த நேரத்தில் நாம் நம்ப வேண்டும் என வலியுறுத்துகிறார் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தொற்றுநோய் துறை நிபுணரான டாக்டர் வருண் சுந்தரமூர்த்தி.

முதல் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் பலர் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர். சென்றமுறை நோய் தொற்று ஒருவருக்குத் தீவிரம் அடைய இரு வாரங்கள் ஆனது. ஆனால் தற்பொழுது ஒரு வாரத்திற்குள் பாதிப்பு தீவிரமாகிறது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கொரோனா தொற்றிலிருந்து குணமாவதற்கு அனைத்துவிதமான சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதை இப்போது பார்க்கிறோம். ஆனால், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துக்கொண்ட யாருக்குமே கருப்பு பூஞ்சை நோய் ஏற்படவில்லை என்பது தனிச்சிறப்பாகும்.

ஸ்டீராய்டு மருந்துகளின் அதீத பயன்பாடு மற்றும் கொரோனா தொற்று காலத்தில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்காதது ஆகிய இரு காரணங்களால்தான் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக வீரியமிக்க ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவதில்லை. சர்க்கரை நோய் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, சர்க்கரையின் அளவு கண்காணிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சையில் மருந்துகளைப் போலவே ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எடுத்துக்கொள்வதும் மிகவும் அவசியம்.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும் தனி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் மிகவும் எளிதாகிறது.

உரிய சிகிச்சைகள் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளுடன், கொரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்குகிறோம். இதுபோன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை சிறப்பு அம்சங்களால், தீவிர கொரோனா பாதிப்போடு நமது மருத்துவமனைக்கு வருபவர்களுக்கும், சிறப்பான சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

குறிப்பாக, கருப்பு பூஞ்சை பாதிப்பால் ஒரு பக்க முகம் முழுவதும் பாதிக்கப்பட்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு வந்தவர், அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்தார். இப்படி நுரையீரல் தீவிர பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள், ஒரு மாத காலம் வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உடல்நலம் பெற்றவர்கள் என ஏராளமானோர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு நன்றி சொல்கின்றனர்.

உலகத்தரமான எக்மோ சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கான பிரத்யேக ஆபரேஷன் தியேட்டர்கள், கொரோனாவிற்குப் பிறகான பிசியோதெரபி சிகிச்சை மற்றும் கொரோனா சிகிச்சையில் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களால் மற்ற மருத்துவமனைகளை விட கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கொரோனா இறப்பு விகிதம் மிகமிகக் குறைவாக உள்ளது.