டெடி – 2ம் பாகத்தில் நடிக்க ஆர்யா ஆவல்!

ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஓடிடியில் வெளியான டெடி படமும், அதில் இடம்பெற்ற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ஆர்யா விரைவில் டெடி படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் டெடி இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் ஆர்யா கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யா கைவசம் தற்போது சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஷாலுடன் எனிமி, பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் உள்ளன. இம்மூன்று படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றது.