ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ‘பாரத மாதா’

கோவை உடையாம்பாளையம் பகுதியில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், நோயாளிகள், கொரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள மக்கள், சாலையோர பணி செய்யும் தொழிலாளர்கள், சாலையோர ஆதரவற்றவர்கள், நியாயவிலை கடையோரம் உள்ள பெண்கள், செக்யூரிட்டி தொழிலாளர்கள், சாலையோர மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் கெளரி சங்கர், டார்வின், கார்த்திக், ராஜேஷ், ரஞ்சித், சாம், கமலக்கண்ணன், மெய்யழகன், பிரகாஷ், சுரேஷ், இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.