பிக்பாஸ் சீசன் 5 அப்டேட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றுள்ளனர் . வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் மட்டும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது .

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக இந்த ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் . விரைவில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.