நுரையீரல் சளியை வெளியேற்றும் ஆடாதொடை

நவீன காலத்தில் இயற்கையையும், இயற்கை மருத்துவத்தையும் முழுவதுமாக மறந்து வருகிறோம். தலைவலி, காய்ச்சல் என்றால் அனைவரும் மருந்து மாத்திரைகளை தேடி ஓடுகிறோம். ஆனால் முன்னொரு காலத்தில் இயற்கை மருந்து அதிக அளவில் காணப்பட்டது. அதை அனைவரும் தற்போது மறந்து விடுகிறோம். உடலில் பல பிரச்சினைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதுபோல நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஆடாதொடை மூலிகையை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் ஆடாதொடை பொடி கால் டீஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாகும். ரத்த நாளத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். ஆடாதொடை செடி ஆக்சிஜன்களை அதிக அளவில் தரவல்லது.இதனால் மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். இதை ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது.