தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்

பொதுமக்கள் நேரடியாக தங்கள் புகார்களை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் அளிக்கும் புகார்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைஅறிந்து கொள்ளும் வசதியும் இந்த இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சார காலத்தில் அளித்த வாக்குறுதிபடி ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற பெயரில் மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

பொதுமக்கள் www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் புகார்களை தெரிவிக்கலாம்.