கொரோனாவில் இருந்து மீண்ட இதய நோயாளிகள் முழு இதய பரிசோதனை செய்ய வேண்டும்

  – மருத்துவர் எம். லாரன்ஸ் ஜேசுராஜ்

கோவிட்-19 லிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் மீண்டு வருகையில், அவர்களில் இருதய நோயாளிகள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என அறியுறுத்தியுள்ளார் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இதயநல மருத்துவர் எம். லாரன்ஸ் ஜேசுராஜ்.

இதுகுறித்து அவர் கூறுகையில்: வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து இதய நோயாளிகளுக்கும், பாதிப்பிலிருந்து மீண்ட பின்னர், வைரஸினால் உண்டாகியிருக்கக்கூடிய பக்க விளைவு உறுதிபடுத்த அல்லது சிகிச்சை பெற, இருதய பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில், கோவிட்-19 கடுமையான அறிகுறிகளையும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டதால், இதய நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் உடல் அல்லது இதயத்தில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதை உறுதி செய்வதற்காக, நோயிலிருந்து மீண்ட பிறகு, அவர்கள் முக்கியமான இதயப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற கோவிட்-19 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு முக்கிய ஆய்வில், இதய நோய்களை முன்பே கொண்டவர்கள், இதய சிக்கல்களைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
திடீர் மாரடைப்பு ஏற்பட்டதும், இதயத்தின் திடீர் செயலிழப்பினால் மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்த விநியோகம் உடனடியாக நிறுத்தப்படுகிறது.

இது ஏற்பட்ட மிகக் குறுகிய காலத்திற்குள் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும். 35% அல்லது அதற்கும் குறைவான இதயத் திறன் கொண்ட நோயாளிகள், ஸ்டென்டிங் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, திடீர் மாரடைப்பிற்கான வாய்புகள் அதிகம்.

திடீர் மாரடைப்பு அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு, மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் சிறந்த இருதய பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்கியுள்ளது. பெரும்பாலான திடீர் இருதய செயலிழப்பு மரணங்கள், அசாதாரணமான மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளால் ஏற்படுகின்றன, அவை உயிருக்கு ஆபத்தானவை, இதயம் இரத்தத்தை உந்த இயலாமையினால் இது ஏற்படுகிறது.

எல்லோரும் தங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் முழுமையான நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உங்களைப் நலமுடன் வைத்திருக்க, வீட்டுக்குள்ளேயே சில வகையான உடற்பயிற்சியை செய்வது நல்லது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க சீரான மற்றும் சத்தான உணவை உண்ணுங்கள். உங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எடை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியமான இதயமும் உடலும் நாம் தேர்ந்தெடுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் விளைவாகும் என்றார்.