உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் செயல்: கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை, (CITIZEN CONSUMER CLUB & RED RIBBON CLUB) சார்பில்”உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் செயல்” எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் (07.6.2021) நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பாலசுப்ரமணியன் (Govt of Tami Nadu Member Standing Committee, Organisations Tamil Nadu & Pondicherry General Secretary, Federation of Consumer Mr.R.BALASUBRAMANIAN) கலந்து கொண்டு தமது உரையில் எளிய முறையில் உணவு பாதுகாப்பு மற்றும் தீங்கு விளைவிக்கும் உணவிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றிக் கூறினார்.

நெகிழி பயன்படுத்தி பேக் செய்யப்பட்ட தயாரிப்புகளை வாங்கும்போது நுகர்வோர் கவனிக்க வேண்டிய அனைத்து தகவல்களையும் தமது உரையில் மேற்கோள் காட்டி விளக்கினார். துரித உணவுகளின் விளைவுகள் மற்றும் அதன் தீங்குகள் குறித்தும், கலப்படம் இல்லாத தயாரிப்புகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதையும் விளக்கினார்.

உணவு பாதுகாப்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) பங்கு பற்றி விளக்கினார். உணவு பாதுகாப்பு மற்றும் கலப்பட உணவு பற்றிய விழிப்புணர்வு காணொலிகள் இயக்கிக் காண்பித்தார். மேலும், தமது உரையின் மூலமாக மாணவர்களிடையே எழுந்த ஐயங்களுக்கும், வினாக்களுக்கும் விடை அளித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.