மனித குலத்திற்குத் தேவை பண வலிமையே..! மனவலிமையே..!

 – இணையவழி பட்டிமன்றம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த் துறை பைந்தமிழ் மன்றம், நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் “இன்றைய சூழ்நிலையில் மனிதகுலத்திற்குத் தேவை பணவலிமையே..!மனவலிமையே”..! எனும் தலைப்பில் இணையவழி பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கினார். டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் இன்பத் தமிழ் பாண்டியன் நடுவராக பங்கேற்றார். இந்நிகழ்வில் மேடைப் பேச்சாளர்கள், ஆசிரியர், மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பேச்சாளர்களாக இருந்து கருத்துக்களை முன் வைத்தனர்.

பணவலிமையே.! அணியில் பைம்பொழில் அருள்தாஸ் மணி, நா.மதன்குமார் , முதலாமாண்டு வணிகவியல் மாணவி சுபலட்சுமி சுபஸ்ரீ ஆகியோர் கருத்துக்கள் வழங்கினர்.

மனவலிமையா.!அணியில் வீரபாலாஜி, ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவன் கிரிபிரசாத், முதலாமாண்டு வணிகவியல் மாணவன் கார்த்திக் கலந்துகொண்டு உரை வழங்கினார்கள்.

மனித வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆக்கமான சிந்தனையில் அணுகுங்கள், சோதனைகளே நல்லதோர் சாதனைகள் எனக் கூறியதுடன் பணம் மற்றும் மனம் குறித்தஉன்னத பெருமைகளையும் சிறுமைகளையும் கூறி சிறப்புப்படுத்தினார்கள்.

இன்றைய சூழ்நிலைக்குத் தேவை மனவலிமையே இன்றியமையாதது என்பதை முன்வைத்து நடுவர் தீர்ப்பு வழங்கினார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.