ஜகமே தந்திரம் படத்தில் இரு பாடல்கள் இடம்பெறாது

ஜகமே தந்திரம் படத்தில் “புஜ்ஜி” மற்றும் “நேத்து” ஆகிய இரண்டு பாடல்களும் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார் ‌.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18 ஆம் தேதி நெட்பிலிக்ஸில் வெளியாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் அனிரூத் பாடிய “புஜ்ஜி” பாடல் மற்றும்  தனுஷ் பாடிய “நேத்து” பாடலும் படத்தில் இடம் பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். காரணம் 17 மொழிகளில் படம் வெளியாவதால் மொழி மாற்று பிரச்சனைகளால் இந்த இரு பாடல்கள் படத்தில் இடம் பெறாது என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.