முட்டையில் நிறைந்துள்ள நன்மைகள்

முட்டையை பற்றி இன்று பெரும்பாலானவர்கள் நினைக்கக் கூடியது எடை அதிகரித்து கொழுப்பு கூடும் என்று தான் அதிலும், முட்டையில் உள்ள மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளையாக இருக்கக்  கூடிய பகுதியை மட்டும் உண்கின்றனர்.  இது போல பல தவறான கருத்துக்கள் முட்டையை பற்றி உள்ளது. ஆனால் முட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது அவற்றைப் பற்றி  காண்போம் .

  • தினமும் ஒரு வேக வைத்த முட்டையினை நாம்  உண்பதன் மூலம் அந்த நாளைக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து விடும். இதில் கால்சியம், ப்ரோட்டீன், வைட்டமின் D, ஒமேகா 3 போன்ற பல்வேறு  சத்துக்கள் நிறைந்துள்ளன .
  • நமது உடலின் வளர்ச்சி மற்றும் இயக்கத்திற்கு முக்கியமாக அமைவது புரதங்களே. அதிகப்படியான புரதம் உள்ளதால் முடி மற்றும் சருமத்தின் ஆரோகியத்திற்கு  உதவுகிறது.
  • முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் D உள்ளதால் இது நமது எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலிமை சேர்கிறது.
  • மஞ்சள் கருவில் அதிக அளவு கொழுப்பு இருப்பதனால் இதய நோய் வரக்கூடும் என்ற தவறான புரிதல் உள்ளது. ஆனால் கெட்ட   கொழுப்புகளால்  தான் நமது  உடலுக்கு கெடுதலே  தவிர  முட்டையில்  உள்ள நல்ல கொழுப்புகளினால்  எவ்வித உடல் நல  கோளாறுகளும்  ஏற்படாது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். முட்டைகளில் கொழுப்பு இருந்தாலும் அவை நமது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்காது
  • ஆன்டி- ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பதால் கண்களின் கருவிழியை பாதுகாக்கிறது.
  • பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்  வயிற்றில் வளரும் குழந்தைக்கு  தேவையான சத்து  கிடைக்கும்.
  • உடலுக்கு தேவையற்ற கெட்டக் கொழுப்பை குறைத்து, உடல் எடையை கட்டுக் கோப்புடன் வைக்க உதவுகிறது.
  • முட்டையில் செலினியம் என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளதால் உடலில் ஏற்படும் செல்களின் அழிவினை தடுத்து நம்மை இளமையுடன் வைத்திருக்கும் .