புதிதாகத் திருமணம் ஆனவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

புதிதாக திருமணமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்படுமா என்று விகடன் இணையத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

“புதிதாகத் திருமணமானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இதுவரை சொல்லப்படவில்லை. கர்ப்பம் தரிப்பதிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனாலும், புதிதாகத் திருமணமான தம்பதியர் உடனே குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருந்தால், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டு, அதன் பிறகு ஒரு மாதம் கழித்து கர்ப்பத்துக்குத் திட்டமிடலாம் என்பது என் அட்வைஸ்.

இப்படிச் சொல்வதற்கு முக்கியமான காரணம் உண்டு. நம்மூரில் கர்ப்ப காலத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதில்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டு, குழந்தைப் பேற்றுக்கு பிளான் செய்யலாம். கர்ப்பகாலத்தில் கொரோனா தாக்கினால் உருவாகும் ரிஸ்க்கையும் இதன் மூலம் தவிர்க்கலாம்”.