செவிலியர்களுக்கு தற்காலிகப் பணி ஆணை

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 100 செவிலியர்களுக்கு தற்காலிக பணி ஆணையை தமிழக அமைச்சர்கள் இன்று (07.06.2021) வழங்கினர்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில், 100 செவிலியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் தற்காலிகமாக பணியமர்த்துவதற்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணையை தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, சுப்ரமணியம், சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

கோவையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, சுப்ரமணியம், சக்கரபாணி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.