கொரோனா சிகிச்சை மையத்திற்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள்

கே. ஐ. டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு சூலூர் அரிமா சங்கம் சார்பில் சுமார் ரூபாய் 7 லட்சம் மதிப்பீடு கொண்ட 6 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க சூலூர் பகுதியில் உள்ள கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சூலூர் அரிமா சங்கம் சார்பில் சுமார் ரூபாய் 7 லட்சம் மதிப்பீடு கொண்ட 6 ஆக்சிஜன் செறிவூட்டி (oxygen concentrator) கருவிகளை நில வருவாய் ஆய்வாளர் திரு.சிவபாலன்,கண்ணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் திருமதி.ஏசுமணி ஆகியோரிடம் கல்லூரி நிறுவன தலைவரும் மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலுர் நா.பழனிசாமி வழங்கினார். இதில் சூலூர் அரிமா சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.