“கருப்பு பூஞ்சை ஓர் அரிதான உயிர்கொல்லி”

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சிலருக்கு நோய் எதிப்பு சக்தி குறைவின்மையால் மியுகோர்மைகோஸஸ் என்னும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன் அறிகுறிகள், இதனை எவ்வாறு கையாளுவது என்ற மருத்துவரின் ஆலோசனையை காண்போம்.

இதுகுறித்து டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறியதாவது :

மியுகோர்மைகோஸஸ் என்பது அரிதான உயிர்கொல்லி கருப்பு பூஞ்சை ஆகும். இந்தியாவில் இந்த கோவிட்-19 இரண்டாம் அலையில் இது அதிக பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளிகள், இரத்த புற்று நோய், எச்.ஐ.வி ஃ எய்ட்ஸ் மற்றும் ஸ்டெராய்டு மருந்து உட்கொள்பவர்களை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். மியுகோர்மைகோஸஸ் நோய்க்கு அவசர சிகிச்சை மிகவும் அவசியம், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை குழுவின் அதிதீவிர சிகிச்சை இன்றியமையாதது.

இந்நோய் தாக்க வாய்ப்பு உள்ளவர்கள் : இரத்த சாக்கரையின் அளவு கட்டுபாடற்ற நீரழிவு உள்ளவர்கள், ஸ்டெராய்டு மருந்து உட்கொள்பவர்கள், கோவிட்-19 னால் பாதிக்கப்பட்டு அதற்காக ஸ்டெராய்டு அல்லது டேஈசிலிசுமாய் போன்ற மருந்துகனள உட்கொள்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவாகள், தீவிர சிகிச்சை பிரிவில் அதிக நாட்கள் தங்கி இருப்பவர்கள், ஆக்ஸிஜன் சிகிச்சையில் நீண்ட காலம் உள்ளவர்கள் மற்றும் எச்.ஜ.வி / எய்ட்ஸ் நோயுற்றவர்.

அறிகுறிகள் : முகம்வலி, பல் வலி, முகத்தாடை வலி, சைனசினால் வரக்கூடிய தலைவலி, மூக்கடைப்பு, கண்கள் சிவந்து போதல், மூக்கிலிருந்து இரத்தம் கலந்த சளி வெளியேறுதல், இரட்டை பார்வை, மங்கலான பார்வை மற்றும் திடீர் பார்வை இழப்பு.

அடையாளங்கள் : முக வீக்கம் மற்றும் நிறமாறுதல், நாசியில் மற்றும் கருப்பு நிற திசு படிதல். கண்ணின் இமைகள் கீழ்நோக்கி இறங்குவது, கண்ணில் துருத்த நிலை பிதுங்கி தோன்றுவது, கண் தசைகள் முடக்கம், கண்ணிற்குள் அழற்சி (Infection) கண் நரம்பு இரத்த நாணம் அடைப்பு.

உடனே செய்ய வேண்டியவை : இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல், கவனமாக ஸ்டெராய்டு மருந்துகளை பயன்படுத்துதல், கொரானாவிலிருந்து குணமடைந்த பின்பும் இரத்தத்தின் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது. ஆரம்ப அறிகுறிகளை கண்காணிப்பது. ஆக்சிஜன் / பிராணவாயு சிகிச்சைக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்துவது. சுத்தமான மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதார முறையை கடைபிடிப்பது.

செய்யக்கூடாதவை : மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஸ்டெராய்டு மற்றும் பூஞ்சை கொல்லி மருந்துகள் உட்கொள்வது. நீரிழிவு மற்றும் கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை தள்ளி போடுவது.

பரிசோதனைகள் : ஹ_மோகிராம் (இரத்த பரிசோதனை), இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிப்பது, 1. காலை சாப்பிடுவதற்கு முன், 2. சாப்பிட்ட ஒன்றறை மணி நேரத்திற்கு பின் 3. மூன்று மாத கால சராசரி அளவு (HBA1C), சி.டி. ஸ்கேன்-சைனஸ், MRI ஸ்கேன் – மூளை மற்றும் கண், நாசி மற்றும் சளி பரிசோதனை, மூச்சுக்குழாய் பரிசோதனை மற்றும் நாசி என்டோஸ்கோபி பரிசோதனை.

கையாளும்முறை : 1. நீரிழிவு, கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவர் மற்றும் நரம்பியல் நிபுணர்களை ஆலோசிக்க / சந்திக்க வேண்டும். 2. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் 3. இரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணிக்கும் கருவிக்கொண்டு (குளுக்கோமீட்டர்) சர்க்கரையின் அளவை அடிக்கடி சுய கண்காணிப்பு செய்ய வேண்டும். 4. ஸ்டெராய்டு மருந்து உட்கொள்பவர்கள் முடிந்தவரை மருத்துவரின் ஆலோசனையின் படி குறைத்து கொள்வதோ அல்லது நிறுத்தி கொள்வதோ நல்லது 5. தகுந்த மருத்துவ ஆலோசனையின் படி கருப்பு பூஞ்சை சிகிச்சை மருந்துகளை உட்கொள்ளலாம். 6. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிலருக்கு உயரிய அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.