சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு அறிவிப்புக்கு பின் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு

சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான பின்பு, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கூறியுள்ளார்.

பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு குறித்து அறிவிப்பிற்கு பிறகு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்வும், சிபிஎஸ்இ தேர்வு குறித்து அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

ஆன்லைன் வகுப்பு துவங்கும் முன்னர் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  கல்விக்கட்டணம் தொடர்பான நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட கமிட்டியை வலுப்படுத்த திட்டம் உள்ளது என கூறினார்.