“சோழ பரம்பரையில் ஒரு லண்டன் தாதா” : ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ட்ரைலர் காட்சிகளில் இப்படம் வரும் ஜூன் 18 ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ” தப்பு பண்றேன் அவ்ளோதான் பெரிசு சிறுசு – ன்னு அளவெல்லாம் கிடையாது”,  “சோழ பரம்பரையில் ஒரு லண்டன் தாதா” போன்ற ட்ரைலரில் வரும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுவதாக அமைந்துள்ளது. கேங் ஸ்டர் கதை களத்துடன் அமைந்துள்ளதால், ஒரு மாறுப்பட்ட திரைகதையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.