கொரோனா பாதிப்பால் கோவையில் ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 3488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், கோவையில் பரவல் அதிகரித்துள்ளது
கடந்த 6 நாளாக கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்து வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 488 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70ஆயிரத்து 497 ஆக உயர்ந்தது. தவிர, கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 3308 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 29 ஆக உள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 39 ஆயிரத்து 53 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், கோவையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 39 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,274-ஆக உயர்ந்துள்ளது.