தினமும் உணவு வழங்கி வரும் தி.மு.க நிர்வாகிகள்

சாய்பாபா காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு, தி.மு.க வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த் மற்றும் தொண்டரணி துணை அமைப்பாளர் தளபதி மோசஸ் ஆகியோர் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

முழு ஊரடங்கால், தமிழகத்தில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை தொழிலாளர்கள் ஒருவர் கூட உணவு கிடைக்காமல் இருக்க கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உணவின்றி தவிப்பவர்களுக்கு தினமும் உணவு வழங்க தி.மு.க.தொண்டர்கள் முன் வரவேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

இந்நிலையில் இதனை பின்பற்றும் வகையில், வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த், மற்றும் தொண்டரணி துணை அமைப்பாளர் தளபதி மோசஸ் ஆகியோர் சாய்பாபா காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய தெலுங்கு தேவாங்க சமுக நல சங்கம் மத்திய சங்க மாநில தலைவர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை வழங்கினார். ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில், தினமும் உடலுக்கு ஆரோக்கியமான எலுமிச்சை, புதினா, மல்லி மற்றும் சாம்பார் சாதம் என பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து தினமும் வழங்கி வரும் தி.மு.க.நிர்வாகிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதனை கேள்விபட்ட பிரபல எருமைசாணி யூ டியூப் சேனல் விஜய் உணவு வழங்கும் இடத்திற்கு வருகை புரிந்து தன்னலம் பாராமல் முதல்வரின் உத்தரவை பின்பற்றி சேவை புரிந்து வரும் காலனி வினோத் ஆனந்த் மற்றும் தளபதி மோசஸிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.