சமூக ஊடகங்கள் சமுதாயத்தைப் பண்படுத்துகிறது! பாழ்ப்படுத்துகிறது! – சிறப்புப் பட்டிமன்றம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய “இன்றைய சமூக ஊடகங்கள் சமுதாயத்தைப் பண்படுத்துகிறது! பாழ்ப்படுத்துகிறது!” என்ற தலைப்பில் இணைய வழி சிறப்புப் பட்டிமன்றம் (30.5.2021) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு முதல்வர் பாலுசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார். இந்நிகழ்விற்கு மேடைக் கலைவாணர் குறிஞ்சிப்பாடி, இரா. நவஜோதி நடுவராக இருந்து சிறப்பித்தார்.

இன்றைய சமூக ஊடகங்கள் சமுதாயத்தைப் பண்படுத்துகிறது! என்ற தலைப்பில் விஜய்டிவி புகழ் அரக்கோணம் தினேஷ், ராஜ்டிவி புகழ் கானக்குயில் கவிதா, உதவிப்பேராசியர் பொதிகைத் தொலைக்காட்சிப் புகழ் பிஅனுராதா ஆகியோர் வாதிட்டனர்.

எதிரணியில் கலைஞர் டிவி புகழ் கடலூர் தணிகைவேல், கின்னஸ் சாதனையாளர் மெகாடிவி புகழ் சேலம் ஐஸ்வர்யா, உதவிப்பேராசிரியர் கோகுல்நாத் ஓரணியாக இருந்து சமூக ஊடகத்தால் சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களை விவாதித்தனர்.

இந்நிகழ்வில் நடுவர் சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் பண்படலாம் என்ற தீர்ப்பினை வழங்கினார்.

இந்நிகழ்வில் சுமார் 130 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.