
கோவையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ பணியிடங்களுக்கான நேர்காணல் மாநகராட்சி வளாகத்தில் இன்று (31.05.2021) நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக பல்வேறு அரசு மருத்துவமனையில் பிரச்சினைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 25 மருத்துவர்களை பணி நிமித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்கு ரூபாய் 60,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும், இதற்காக இளநிலை மருத்துவம் முடித்திருக்கும் மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் பணியிடங்களுக்கான நேர்காணல் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணி மூன்று மாதங்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் நேர்முகத்தேர்வுக்கு மருத்துவர்கள் பலர் வந்து செல்கின்றனர்.