கொரோனா நிதிக்காக உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுமி

கொரோனா தடுப்பு ஆய்வு நடவடிக்கைகளை பார்வையிட நேற்று (30.5.2021) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை வந்தார்.

கோவைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை கோவை சௌரிபாளையத்தை சார்ந்த 7-ம் வகுப்பு மாணவி நிவேதிதா சந்தித்து, தனது உண்டியல் சேமிப்பு தொகை ரூபாய். 14,800 – ஐ முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினார். உடன் அவரது தந்தை தாமோதரன் உள்ளார்.