ஆஸ்கர் விருது: அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு

94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா வருடம்தோறும் அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெறும். திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் இந்த விருது கருதப்படுகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக, ஏப்ரல் 25 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94-வது ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடைபெறும் என்று ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.