நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த முதல்வர்

கோவை மாவட்டம் சமீப நாட்களில் கொரோனா தாக்குதலால் மாநிலத்திலேயே அதிகம் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து பல சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் கண்டறிய கோவை வந்தபொழுது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் பிபிஇ கிட் அணிந்து ஆய்வு மேற்கொண்டார்.

அத்துடன் கொரோனா நோயாளிகளை சந்தித்து நோயாளிகளின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளை ஒரு முதல்வர் நேரடியாக பார்ப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.