கே.ஜி.எப் – 2: வெளியீடு தேதியில் மாற்றம்

கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் நிலையில், கே.ஜி.எப் – 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் படத்தின் வெளியீடு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியாகி, திரையரங்கில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, கே.ஜி.எப் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இரண்டாம் பாகமும் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஜூலை 16-ம் தேதி ‘கே.ஜி.எப் 2’ வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கே.ஜி.எப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ஜூலை 16-ம் தேதி வெளியாகாது எனக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக புதிய தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.