சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்க்கை முறை – கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், உன்னத் பாரத் அபியான் (UBA) மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் “சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்க்கை முறை” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் இன்று (15.05.2021)நடைபெற்றது.

தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் பசுமை நிறைந்த மரங்களின் மகத்துவம் குறித்தும் மரங்களைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக, (Conservation Trust , Target Zero Environment) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பாலகுமாரன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.  பிளாஸ்டிக் பைகள்  மற்றும் பாலிப்ரொப்பிலீன் பைகள் பயன்படுத்துவது அதிகத்தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்தார்.

மனித உயிர்வாழ்விற்கான ஆக்ஸிஜன் அளவின் முக்கியத்துவம், சமநிலை மற்றும் அச்சுறுத்தும் சூழ்நிலைக்கு கிடைக்கக்கூடிய ஒரே வழி வளரும் மரங்கள் தான் என்று வலியுறுத்தினார். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, நில மாசுபாடு மற்றும் அதிர்ச்சி தரும் புள்ளிவிவர தகவல்களுடன் ஒலி மாசுபாடு ஆகிய நான்கு வகையான மாசுபாடுகளையும் கூறினார்.

மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் இயற்கையை மாசுபடுத்தவோ அச்சுறுத்தவோ கூடாது என்று உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.