குமரகுரு கல்லூரியில் தமிழ் அறிவுத் திருவிழா

 

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பாக தமிழ் அறிவுத் திருவிழா 18 அண்மையில் கொண்டாடப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான தமிழ் சார்ந்த மழலைத் தமிழ் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வெவ்வேறு பள்ளிகளைச் சார்ந்த 200 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர்.

மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த  பல்வேறு போட்டிகளில் (டாக்டர்.நா‌.மகாலிங்கம் சுழற்கோப்பை போட்டிகள்) தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளிலிருந்து 400 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ஜெ.செந்தில் பங்கேற்றார். மேலும், தமிழ் மன்றத்தின் முன்னாள் மாணவர் சந்தீப் நாகராஜன் சிறப்புரையாற்றினார்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் “ரோட்ராக்ட் கிளப்” சார்பாக பிளாஸ்டிக்  பயன்பாட்டை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே   “நெகிழி’18”. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து சின்னவேடம்பட்டி வரை மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் 500 துணிப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், மக்களுக்கு நெகிழியால் ஏற்படும் பாதிப்புகளையும், கல்லூரி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுகளைப் பற்றியும் சிவராஐ் சேகா் சிறப்புரையாற்றினார்.