“தமிழும் விவசாயமும் செழிக்க உதவுங்கள் !”

– நடிகர் சிவக்குமார் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை

‘திரையுலக மார்க்கண்டேயன்’ எனப் போற்றப்படும் நடிகர் சிவக்குமார்  தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கண்டு, முதலைமைச்சராக பொறுப்பேற்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் தன் வாழ்த்துக்களை வீடியோ பதிவு மூலம்  சொல்லி மூன்று வேண்டுகோள்களை முன்வைத்தார்.

நிகழ்ந்து வரும் கொரோனா பெருந்தொற்றின்  தாக்குதலில்  இருந்து மக்களை காப்பாற்றுங்கள் என கேட்டுக்கொண்ட நடிகர் சிவக்குமார், மக்கள் மருத்துவ உதவி நாடி நெடும் கூட்டமாக காலையிலிருந்து மாலைவரை மருத்துவமனைகளில் மக்கள் நிற்பது பார்க்க மிகவும் வேதனை அளிக்கின்றது என்ற பேசினார்.

” மருத்துவமனையில் படுக்கை இல்லை, படுக்கை இருந்தால் ஆக்சிஜன்  இல்லை, ஆக்சிஜன்   இருந்தால் வெண்டிலேட்டர் இல்லை என்ற அவலநிலையை மாற்றுங்கள்” என்று பதிவிட்டார் .

பிற மாநிலங்களான ஆந்திரா , கர்நாடகா மற்றும் கேரளாவில் அவர்களின் தாய்மொழியை அந்த மாநிலங்களில் வசிக்கும்  யாராக இருந்தாலும் கற்கவேண்டும் என்று நிலை இருக்க, நம் தமிழ் நாட்டில் நம் பிள்ளைகள் தாய்மொழியை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை.

தமிழ் வழியில் படித்து, பட்டம் பெறுவோருக்கு நிச்சயமாக வேலையுண்டு என்ற நிலைமையை உருவானால் இங்கு தமிழ் வாழும், வளரும், அதற்கு வழிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

ஏரி, குளங்களை பராமரித்து விவசாயம் செழிக்க உதவவும், கலைஞர் கொண்டுவந்த உழவர் சந்தைக்கு மீண்டும் உயிர் தருமாறும் கேட்டுக்கொண்ட சிவகுமார் மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்காலம் தமிழகத்துக்கு பொற்காலம் என்று  கூறும் வண்ணம் நல்லாட்சி வழங்குங்கள் என்று வாழ்த்தினார்.

கலைஞர் அவர்கள் தன் ஆட்சி காலத்தில் கலைஞர் காப்பீடு திட்டம், செம்மொழி மாநாடு, உழவர் சந்தை என கவனிக்கப்படவேண்டிய சிறப்புகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.