கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 2 கோடி நன்கொடை

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் தற்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்கான நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

தங்கள் ரசிகர்கள் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இரண்டு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் கோஹ்லியும் அனுஷ்காவும் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில்,  இந்தியாவில் கோவிட் -19 வேகமாக பரவுவது குறித்து தங்கள் கவலைகளை பகிர்ந்துக் கொண்டனர். நிவாரணப் பணிகளுக்காக தாங்கள் ஏற்பாடு செய்த நிதி சேகரிப்பாளரின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.