முதல்வரின் முதல் நாளில் சிறப்பான 5 திட்டங்கள்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் தனது தேர்தல் அறிக்கையின் முக்கிய 5 திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டிருக்கிறார். அதன்படி,  அரிசி அடைத்தார்களுக்கு கொரோனா நிவாரண நிதி, சாதாரண கட்டண நகர பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவசம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு,  கொரோனா சிகிச்சை செலவு அரசே ஏற்கும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளார்.

அரிசி அடைத்தார்களுக்கு கொரோனா நிவாரண நிதி :

இரு மாதங்களுக்கு முன்பு கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ. 1000 வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல்வராக பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதி 4000 ஆக வழங்க உத்திராவிடப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன் படி இன்று முதல்வராக பதவியேற்றுக்கும் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கவும், மே மாதத்தில் 2000 ஆயிரம் ருபாய் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

சாதாரண கட்டண நகர பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவசம்:

நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக  பயணிக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர்கள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவு தொகை 1,200 கோடி ரூபாயை மானியமாக அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு :

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த அதிமுக அரசு பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியது. இதனால் நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் பாலின் விலை ரூபாய் 3 குறைத்துள்ளார். இது வரும் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை செலவு அரசே ஏற்கும் :

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதன்படி முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சைகான செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் :

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பிரச்சனை தொடர்பான மனு மீது நடவடிக்கை எடுக்க “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறை வருவாக்கப்பட்டு அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க உத்திரவிட்டுள்ளார்.