சமூகத்தின் பிம்பக்கண்ணாடி எஸ். பி. ஜனநாதன்

எஸ். பி. ஜனநாதன் இந்திய திரைப்பட வரலாற்றில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்து வெறும் 5 படம் மட்டுமே எடுத்து அவை அனைத்தும் பலரின் மனதிலும் சினிமாவிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்.

காலம் கவனிக்க தவறிய மிக பெரிய ஆளுமைகளில் இவர் மிக முக்கியமானவர். அண்மையில் உடல்நல குறைவால் மரணமடைந்த இவரின் கடைசி இயக்கத்தில் வெளியாகவுள்ள லாபம் திரைப்படம் ஒரு முழு அரசியல் கதைக்களத்தை கொண்டுள்ளது என்பது கவனிக்க தக்கது.

இவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமான சமூக அரசியலை பேசியிருக்கும். இவரது முதல் படமான 2003ல் வெளியான இயற்கை திரைப்படம் இன்றும் பல ரசிகர்களை கொண்டிருப்பது ஆச்சரியமிக்க ஒன்றாக உள்ளது. அது ஒரு காதல் கதையை மையமாக கொண்டு இயங்கினாலும் அதனை அவர் வெளிகொண்டுவந்த விதம் காதல் கதை என்ற எண்ணம் எழாமல் ஒரு வித காதலை அவர் காட்சிப்படுத்தியிருப்பார்.

அதனை தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்ற பொதுவுடமை, கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள லாபம் என அனைத்திலும் எதோ ஒரு நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளையும், அரசியலையும் கொண்டு கதை வடிவமைத்து அதில் நாம் உணராத புது புது உணர்வுகளையும் அர்த்தங்களையும் நமக்கு வழங்கியிருப்பார். பூலோகம் திரைப்படத்தில் வசன கர்த்தாவாக நாம் வாழும் சமூகம் முதல் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து அரசியலையும் பிம்ப கண்ணாடியாக தனது வசங்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.

1959 மே 7 ஆம் தேதி பிறந்த எஸ். பி. ஜனநாதனின் இறுதி காலம் வறுமையில் கழிந்தாலும், வான் அளவு மலை போல் உயர்ந்து நிற்கிறது இவரது படங்கள், என்றும் அது நிலைத்திருக்கும்.