இந்தியாவில் 3 ஆம் அலையை தடுக்க முடியாது

இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கத்திற்கே பல உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே இந்தியா தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய ராகவன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது எப்போது உருவாகும் என்பது தெரியாததால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முதல் அலையை ஒப்பிடுகையில் மிகப் பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது. இந்த இரண்டாம் அலையின் தாக்கத்தால் இந்தியாவில் அதிகப்படியானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவை அதிகரித்து கொண்டிருக்கும் வெளியில் இது எப்பொழுது முடியும் என்ற எண்ணம் மட்டுமே நம்முள் எழுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் 3 ஆம் அலையை தவிர்க்க முடியாது என்று  மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய ராகவன் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாக உள்ளது.