இந்தியாவில் முதல்முறையாக சிங்கங்களை தாக்கியுள்ள கொரோனா

இந்தியாவில் முதல்முறையாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் சிங்கங்களுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் அவைகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதிசெய்யப்பட்ட 8 சிங்கங்களின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவைகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் பூங்காவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நியூயார்க் நகரில் 8 சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கும் ஹாங்காங்கில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.