தடுப்பூசி இருப்பு இல்லை : திரும்பி சென்ற மக்கள்

கோவை அரசு கலைக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்கள் இருப்பு இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கபட்டு இருந்ததை கண்டு  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அரசு கலைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அங்கு தினந்தோறும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி ஊசி செலுத்தி வந்தனர்.அதே போல் இன்றும் 100க்கும் மேற்பட்டோர் காலை முதலே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அரசு கலைக் கல்லூரி முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில்  தடுப்பூசி முடிவடைந்துவிட்டது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் வரிசையில் நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வைரஸ் தொற்று கோவையில் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில்  தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவது வருத்தம் அளிக்கிறது என்றும் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி மையங்களில் எவ்வளவு தடுப்பூசிகள் போடப்படும் என்று முன்கூட்டியே அறிவித்தால் உதவியாக இருக்கும் என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.